சத்தியமூர்த்தி நகர், புனித அந்தோணியார் ஆலயதின் வரலாறு

வட சென்னையின் வியாசர்பாடி பகுதியானது ஏழைகளும், தொழிலாளிகளும் நிறைந்த பின்தங்கிய பகுதியாக இருந்த காலகட்டத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சலேசிய குருக்கள், ஆறுதல் அண்ணை ஆலயத்தை வியாசர்பாடி பகுதியில் நிறுவினர்.

அதன் பின்னர் வியாசர்பாடியிலும்  அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்கள் ஆன்ம, சரீர மற்றும் சமூக பொருளாதார  வளர்ச்சி பெரும் பொருட்டு அரும் பங்காற்றி வருகின்றனர்.

குறிப்பாக சத்தியமூர்த்தி நகர் வாழ் இறைமக்களுக்காக புனித அந்தோணியார் துணை ஆலயத்தை நிறுவி ஞாயிறு திருப்பலிகளையும், அந்தோணியாரின் நவ நாட்களையும் நடத்தி வந்தனர்.

2009 ஆம் ஆண்டு வியாசர்பாடி ஆறுதல் மாத ஆலயத்தில் இருந்து பிரித்து. புனித அந்தோணியார் ஆலயம் தனிப்பங்காக இயங்க ஆரம்பித்தது.

அருட்தந்தை. பேசில், sdb, அவர்கள் முதல் பங்கு தந்தையாக பொறுப்பேற்றார். 2009 - 2015 ஆண்டு வரையில் ஆன அவரது பணிக்காலத்தில் பங்கின் அணைத்து மக்களையும் அரவணைத்து பங்கினை உயர்ந்த நிலைக்கு இட்டுச்சென்றார்.

2015 ஆம் ஆண்டு அருட்தந்தை.  ஜெப்ரி கிளாட்ஸ்டன் அவர்கள் இரண்டாவது பங்கு தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டு மிகத் திறம்பட பங்கினையும், இறைமக்களையும் வழி நடத்தி வருகின்றார்.

பங்கு தந்தை

frjeffry

அருட்தந்தை. ஜெப்ரி கிளாட்ஸ்டன்

பங்கு தந்தை

2015 - Present