Home

கோடிஅற்புதர் என்று அழைக்கப்படும் புனித அந்தோணியார்,  சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் ஆலயமான புனித அந்தோணியார் ஆலயத்தின் பாதுகாவலராக வீற்றிருந்து ஆண்டாண்டு காலாமாய் அருள் பாவித்துக் கொண்டு இருக்கின்றார்.

புனிதரின் அரவணைப்பில் பங்கும், பங்கு மக்களும் சிறந்தோங்கி,  இறை அன்பிலும், அன்பியங்களின் பகிர்தலிலும், ஜெப தப முயற்சிகளிலும் வளர்ந்து வருவதை சமகாலத்தில் மக்கள் கண்கூடாக காண்கின்றனர்.</p>\n<p>வேண்டியது வேண்டியபடி, கிடைத்த மகிழ்ச்சியில், மக்கள் இறை சாட்சிகளாக அறிக்கை இடுகின்றனர்.

உங்கள் இருதயத்தை தூய்மையாக்கி,  தூய உயிருள்ள பலியாக உங்களையே இறை இயேசுவிற்கு ஒப்புரவாக்க, புனித அந்தோணியாரின் அரவணைப்பை பெற வருமாறு, பங்கு தந்தையின் சார்பிலும், பங்கு மக்களின் சார்பிலும் அன்புடன் அழைகின்றோம்.

வாருங்கள்! இறை ஆசிர் பெற்று செல்லுங்கள்.

புனித அந்தோணியார் ஜெபம்

குழந்தை இயேசுவை கரத்தில் ஏந்தும் பாக்கியம் பெற்ற பரிசுத்தமான அந்தோனியாரே!

வல்லமையுடன் இறைவனிடம் பரிந்து பேசுகின்றவரே!

துன்பப்படுவோருக்குத் துணைபுரியும் வள்ளலே!

ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே!

இதோ உம் பக்தர்களாகிய நாங்கள் ஆழ்ந்த விசுவாசத்துடனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உமது திருத்தலத்திற்கு விரைந்து வந்துள்ளோம்.

நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்கள் ஆன்ம சரீர தேவைகளுக்காக பரிந்து பேசினால் கருணையின் கடலான அவர் ஒருபோதும் தள்ளிவிட மாட்டார்.

தந்தைக்குரிய உமது நேச பராமரிப்பில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. நாங்கள் கேட்டுள்ள இப்போது கேட்கப்போகும் விண்ணப்பங்களை இறைவனிடம் எடுத்துக்கூறி மன்றாடும்.

புதுமை வல்ள்ளலே! உம்மைக் கூவி அழைப்போருக்கு செவி கொடுப்பவரே!

உம் கரங்களால் அரவனைகப்பட விரும்பிய இனிய குழந்தை இயேசுவிடம் இந்த எங்கள் விண்ணபங்களை எங்களுக்காகச் சொல்லிப் பரிந்து பேசுவீராக

ஆமென்

About

சத்தியமூர்த்தி நகர், புனித அந்தோணியார் ஆலயதின் வரலாறு

வட சென்னையின் வியாசர்பாடி பகுதியானது ஏழைகளும், தொழிலாளிகளும் நிறைந்த பின்தங்கிய பகுதியாக இருந்த காலகட்டத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சலேசிய குருக்கள், ஆறுதல் அண்ணை ஆலயத்தை வியாசர்பாடி பகுதியில் நிறுவினர்.

அதன் பின்னர் வியாசர்பாடியிலும்  அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்கள் ஆன்ம, சரீர மற்றும் சமூக பொருளாதார  வளர்ச்சி பெரும் பொருட்டு அரும் பங்காற்றி வருகின்றனர்.

குறிப்பாக சத்தியமூர்த்தி நகர் வாழ் இறைமக்களுக்காக புனித அந்தோணியார் துணை ஆலயத்தை நிறுவி ஞாயிறு திருப்பலிகளையும், அந்தோணியாரின் நவ நாட்களையும் நடத்தி வந்தனர்.

2009 ஆம் ஆண்டு வியாசர்பாடி ஆறுதல் மாத ஆலயத்தில் இருந்து பிரித்து. புனித அந்தோணியார் ஆலயம் தனிப்பங்காக இயங்க ஆரம்பித்தது.

அருட்தந்தை. பேசில், sdb, அவர்கள் முதல் பங்கு தந்தையாக பொறுப்பேற்றார். 2009 – 2015 ஆண்டு வரையில் ஆன அவரது பனிகாலத்தில் பங்கின் அணைத்து மக்களையும் அரவணைத்து பங்கினை உயர்ந்த நிலைக்கு இட்டுச்சென்றார்.

2015 ஆம் ஆண்டு அருட்தந்தை.  ஜெப்ரி கிளாட்ஸ்டன் அவர்கள் இரண்டாவது பங்கு தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டு மிகத் திறம்பட பங்கினையும், இறைமக்களையும் வழி நடத்தி வருகின்றார்

Blog

புனித அந்தோனியார் வாழ்க்கை வரலாறு

பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon, 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231) பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் ”பதுவைப்பதியர்” என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் ”பதுவைப் பதியர்” என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய …

Mass Timings

ஞாயிறு திருப்பலி

காலை 6.00, 7.30 & மாலை 6.00 மணி

மறைக்கல்வி வகுப்புகள்

தினமும் (திங்கள்-சனி)

காலை 6:00 மணி : ஜெபமாலை, நற்கருணை ஆராதனை, திருப்பலி

பிரதி செவ்வாய் & முதல் வெள்ளி

மாலை 6:15 மணி: ஜெபமாலை, நற்கருணை ஆசிர், திருப்பலி

மாதத்தின் 13ம் தேதி – அந்தோணியார் தினம்

மாலை 6:15 : ஜெபமாலை, நற்கருணை ஆசிர், திருப்பலி , விண்ணப்பங்கள் எரித்தல், புனிதரின் திருப்பண்டதிற்கு முத்தி செய்தல்

மாதத்தின் முதல் சனி மற்றும் 24ம் தேதி – தேவதாயின் நாட்கள்

மாலை 6.15 மணி : ஜெபமாலை, தேவதாயின் தேர்ப்பவனி, திருப்பலி, விண்ணப்பங்கள் எரித்தல்